“உல்லாசத்துக்கு வெயிட்டிங் ,உடனே வா” -மிரட்டியே நாலு பேரால் பல வருஷம் பெண்ணுக்கு நடந்த கொடுமை .

 

அசாமின் போன்கைகான் மாவட்டத்தில் உள்ள பவுடி பஜார் பவ்லகுரி பகுதியில் வசிக்கும் ஒரு திருமணமான 23 வயதான பெண் தன்னுடைய குழந்தை மற்றும் கணவரோடு வசித்து வந்தார் .அந்த பெண்ணின் கணவர் டெல்லியில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணி புரிகிறார் ,இந்நிலையில் தனியே இருந்த அந்த பெண்ணை அந்த ஊரை சேர்ந்த நாலுபேர் அவருக்கே தெரியாமல் நிர்வாணமாக படமெடுத்து விட்டனர் .பின்னர் அந்த படத்தை ஊடகத்தில் வெளியிட்டு விடுவதாக அந்த பெண்ணை மிரட்டினர் .
அதன் பிறகு அந்த படம் அப்படி ஊடகத்தில் வராமலிருக்க தாங்கள் எப்போது கூப்பிட்டாலும் உல்லாசத்துக்கு வர வேண்டுமென்று மிரட்டி கடந்த நாலு வருடமாக அந்த நாலு பேரும் அவரை பலமுறை பலாத்காரம் செய்தனர் .
பின்னர் சில மாதங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்த அந்த பெண்ணின் கணவருக்கு இந்த விஷயம் தெரிந்து விட்டது. பின்னர் அதை பற்றி அவர்களிடம் கேட்ட போது அவர்கள் அந்த குடும்பத்தினரின் முகத்தில் கரி பூசி கொடுமை செய்தனர்,அதனால் அந்த பெண் அங்குள்ள காவல் நிலையத்தில அந்த நாலு பேர் மீது புகார் கொடுத்தார் .புகார் கொடுத்தாலும் அவர்கள் சுதந்திரமாக திரிவதாக அந்த பெண் கூறினார் .இப்போது அந்த குற்றவாளிகளில் ஒருவரை மட்டும் போலிஸ் கைது செய்துள்ளது .

Contact Us