பிரபல கனேடிய நடிகை கொலை வழக்கில் முக்கிய திருப்பம்

 

பிரபல கனேடிய நடிகை Emerald MacDonald கொலை வழக்கில் நுணாவுட் பிராந்தியத்தில் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த மே மாதம் நடந்த கொலை வழக்கு தொடர்பில் விசாரணை முன்னெடுத்து வந்த பொலிசார், வெள்ளிக்கிழமை Scott Hala என்பவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும், இன்னொரு பெண்மணி கொலை செய்ய முயற்சித்ததாகவும் குறித்த நபர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. 5 மாதங்களுக்கு முன்னர் Kugluktuk பகுதியில் அமைந்துள்ள அறை ஒன்றின் வெளியே நடிகை Emerald MacDonald சடலமாக மீட்கப்பட்டார்.

பொலிசார் முன்னெடுத்த விசாரணையில், ஏப்ரல் 30ம் திகதி நடிகை Emerald MacDonald தமது குடும்பத்தினருக்காக அங்காடி ஒன்றில் பொருட்கள் வாங்கிய நிலையில் கடைசியாக காணப்பட்டார் என தெரிய வந்துள்ளது.

2018ல் விளையாட்டு தொடர்பான கனேடிய திரைப்படம் ஒன்றில் நடிகை Emerald MacDonald நடித்திருந்தார். நடந்த சம்பவங்களை கருவாக கொண்டு உருவாக்கப்பட்ட திரைப்படம் அது.

நடிகை Emerald MacDonald கொலை வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள நபருக்கும் நடிகை Emerald MacDonald-கும் தொடர்பு இருந்துள்ளதா என்பதில் உறுதியான ஆதாரங்கள் ஏதும் இதுவரை கிடைக்கவில்லை என்றே பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், நடிகை கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது முதல் நிலை கொலை வழக்கு பதியப்பட்டுள்ளதால், அவருக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் என்றே கூறப்படுகிறது. மட்டுமின்றி, தண்டனை காலத்தின் முதல் 25 ஆண்டுகள் அவருக்கு பிணையும் வழங்கப்படாது என்றே தெரிய வந்துள்ளது.

Contact Us