அதிகாலையில் பெண் பலாத்காரம் செய்து கொலை: 15 வயது சிறுவனின் வெறிச்செயல்..!

செங்கல்பட்டு அருகே இரண்டு மகன்களின் தாயை பலாத்காரம் செய்து கொலை செய்த சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், வடக்குப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ராமு. இவரது மனைவி செண்பகம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 50 வயதாகும் செண்பகத்துக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். செண்பகம் இயற்கை உபாதைகளுக்கு அவரது வீட்டுக்கு பின்னால் உள்ள மலை முகட்டு பகுதிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்த நிலையில் இரு நாட்களுக்கு முன்பு அதிகாலை வீட்டுக்கு பின்னால் நாய் குரைக்கும் சத்தம் கேட்டதால் செண்பகத்தின் மூத்த மகன் அங்கு சென்று பார்த்துள்ளார். அப்போது தாய் மயங்கிய நிலையில் இருக்க மர்ம நபர் ஒருவர் அங்கிருந்து தப்பி ஓடுவதை பார்த்து சத்தமிட்டு மற்றவர்களை அங்கு அழைத்துள்ளார். அதனை தொடர்ந்து செண்பகம் இறந்திருப்பது தெரிய வந்தது.

சம்பவம் குறித்து உறவினர்கள் திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து விசாரித்து வந்ததில், இயற்கை உபாதை கழிக்க சென்ற செண்பகத்தை அப்பகுதியில் காயலான் கடையில் வேலை பார்த்து வரும் 15 சிறுவன் பலாத்காரம் செய்ததும், தடுக்க முயற்சி செய்த செண்பகத்தை அச்சிறுவன் அடித்து கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது.

இந்நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் சிறுவனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறார் சிறையில் அடைத்தனர்.

Contact Us