யாழில் பிரபல போட்டாக்கிராப்பரான அக்கா புருசனால் தொடர்ச்சியாக சிறுமி வல்லுறவு!! நடந்தது என்ன?

 

யாழ்ப்பாணம், கொக்குவில் பகுதியில் 13 வயதான சிறுமியொருவரை துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் இளம்குடும்பஸ்தர் ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 33 வயதான குடும்பஸ்தர் புகைப்பட கலையகம் ஒன்றை நடத்தி வருகிறார். 29ஆம் திகதி வரை அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொக்குவிலில் பகுதியில் உள்ள தனது ஒன்றுவிட்ட சகோதரியின் வீட்டில் வசித்து வந்த 13 வயதான சிறுமியொருவர் வலிப்பு ஏற்பட்டு, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றுவிட்ட சகோதரியின் கணவரால் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கப்பட்டதாக சிறுமி, வைத்தியர்களிடம் தகவல் வழங்கியிருந்தார்.

இதையடுத்து, வைத்தியசாலை நிர்வாகத்தினால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில், கடந்த 13ஆம் திகதி புகைப்பட கலையக உரிமையாளர் கைதானார்.

சிறுமியின் தகவல்படி, சில காலமாக துஷ்பிரயோகம் இடம்பெற்றுள்ளது.

 

Contact Us