ஒரே குடும்பத்தை சேர்ந்த 17 பேர்…. மர்ம கும்பலின் துணிச்சலான செயல்…. ஹைதியில் பரபரப்பு….!!

 

கரீபியன் தீவு நாடான ஹைதியில் அதிகளவு கடத்தல் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. இதனையடுத்து தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகளின் முயற்சியால் கடந்த சில வருடங்களாக அங்கு கடத்தல் சம்பவங்கள் குறைந்திருந்தது. இந்த நிலையில் அண்மையில் அந்நாட்டின் அதிபரான ஜோவனல் மோயிஸ் கூலிப் படையினரால் படுகொலை செய்யப்பட்ட பின் கடத்தல் கும்பல்களின் கை மீண்டும் ஓங்கி இருக்கிறது.

ஹைதியின் தலைநகர் போர்ட் அவ் பிரின்சில் உள்ள தேவாலயத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த கிறிஸ்தவ ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் வேலை பார்த்து வருகின்றனர். இந்நிலையில் கிறிஸ்தவ ஊழியர்கள் தங்கள் குடும்பத்தினரோடு அருகில் உள்ள ஒரு அனாதை ஆசிரமத்திற்கு சென்று விட்டு பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை வழிமறித்த ஒரு கும்பல் சிறுவர்கள் உட்பட 17 பேரை கடத்திச் சென்றுள்ளனர். ஆனால் கடத்தியவர்கள் யார்..? அவர்களின் நோக்கம் என்ன..? என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இதுகுறித்து அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

Contact Us