“ஆப்கானிஸ்தான் விவகாரம்” அழைப்பு விடுத்த ரஷ்யா…. நாங்கள் கலந்துகொள்ள மாட்டோம்….!!!

 

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் தலிபான் பயங்கரவாதிகளின் ஆட்சியை பல நாடுகள் அங்கீகரிக்கவில்லை. மேலும் ஆப்கானிஸ்தானுக்கு வழங்கிய உதவிகளை பல நாடுகள் மற்றும் அமைப்புகள் நிறுத்தியுள்ளது. இதனிடையில் ஆப்கானிஸ்தானில் தற்போது உள்ள சூழ்நிலையில் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதம் செய்ய ரஷ்யா தலைமையில் சிறப்பு கூட்டம் நடைபெறுகிறது. எனவே ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்று வரும் இந்தக் கூட்டத்தில் ஆப்கானிஸ்தான் தரப்பில் தலிபான்களின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள இருக்கின்றனர்.

மேலும் இந்த கூட்டத்தில் இந்தியா, பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட நாடுகளும் கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்கா கலந்துகொள்ள வேண்டும் என ரஷ்யா அழைப்பு விடுத்தது. ஆனால் ரஷ்யாவின் அழைப்பை அமெரிக்கா நிராகரித்ததோடு ஆப்கானிஸ்தான் விவகாரம் குறித்து மாஸ்கோவில் நடைபெற்று வரும் கூட்டத்தில தாங்கள் பங்கேற்கவில்லை என்று தெரிவித்துள்ளது.

Contact Us