“உனக்கு கல்யாணமாகி குழந்தை இருக்கா ,இது தெரியாமல் …”பேஸ் புக் பெண்ணிடம் சிக்கிய வாலிபர்

 

தமிழகத்தின் ராமநாதபுரத்தில் விஜய் என்ற இளைஞர் பேஸ்புக் மூலம் ஐஸ்வர்யா என்ற இளம்பெண்ணோடு நட்பு ஏற்படுத்திக்கொண்டு பழகி வந்துள்ளார் .இருவரும் பல மாதங்களாக அரட்டையடித்து வந்தனர் .அந்த பெண் தனக்கு கல்யாணமாகி குழந்தைகள் இருப்பதை மறைத்துவிட்டு, அந்த விஜய்யை நாளடைவில் காதலிக்க ஆரம்பித்தார் .அந்த வாலிபரும் அந்த பெண் திருமணம் ஆனது தெரியாமல் அவரோடு பசி பழகி வந்தார் .
இந்நிலையில் அந்த பெண் திடீரென அவரை சந்திக்க அவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது ஐஸ்வர்யாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருப்பது தெரியவந்ததால் அந்த இளைஞர் விஜய் அதிர்ச்சியடைந்தார். உடனே அவர் அந்த ஐஸ்வர்யாவை ராமநாதபுரம் மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு அவரின் கணவருக்கு தகவல் அளித்துள்ளார். தன்னுடைய மனைவியை காணாமல் புகாரளித்த கணவர் ரங்கன் தூத்துக்குடியிலிருந்து வருவதற்குள் ,ராமநாதபுரம் அரசு மருத்துவமனை ஆலோசனை மையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த ஐஸ்வர்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனால் அந்த கணவரும் அவரின் நண்பர் விஜய்யும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர் .போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர் .

Contact Us