இறந்த பின்பும் சேவை…. மருத்துவத்துறையில் புதிய மைல்கல்…. உலக சுகாதார மையத்தின் பாராட்டு….!!

 

ஆப்பிரிக்காவை சேர்ந்த ஹென்ரீட்டா லாக்ஸ் என்னும் இளம்பெண் கடந்த 1951 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கருப்பைவாய் புற்றுநோயால் உயிரிழந்தார். இவர் தனது 21வது வயதில் மரணமடைந்தார். தற்பொழுது அந்த பெண் இறந்து 70 ஆண்டுகள் ஆயினும் அவருடைய உடல் செல்கள் இன்று வரை பல மருத்துவ கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவாக உள்ளது. அதிலும் போலியோ தடுப்பூசி, HPV தடுப்பூசி, ஜெனெடிக் மேப்பிங் மற்றும் கொரோனா தொற்றுக்கான தடுப்பூசி இது போன்று பல்வேறு உயிரை காப்பாற்றக்கூடிய மருந்துகளுக்கு ஆதரவாக இருந்து வருகிறது. இவரின் செல்களுக்கு Hela என்று பெயரிட்டுள்ளனர்.

அதாவது இவரின் பெயரில் உள்ள ஆங்கில எழுத்துக்களை கொண்டு உருவாக்கியுள்ளனர். அதிலும் இவரின் செல்களில் உயிரைக் காப்பாற்றக்கூடிய சிறப்பம்சம் உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இவர் பால்டிமோரில் உள்ள ஜான் ஜாப்கின்ஸ் என்ற மருத்துவமனையில் கருப்பைவாய் புற்றுநோயினால் உயிரிழந்துள்ளார். மேலும் ஹென்ரீட்டாவின் அனுமதி இல்லாமல் அவரின் திசுக்களை மருத்துவமனை நிர்வாகம் பயன்படுத்த தொடங்கியுள்ளது. இறுதியில் ஆய்வகத்தில் அழிவு இல்லாத மனித செல்கள் அதாவது ‘இம்மார்டல் லைன்’ என்னும் செல்கள் வளர்வதற்கு வழிவகை செய்துள்ளது.

குறிப்பாக இச்செல்கள் எண்ணிக்கையின்றி வளரும் தன்மை உடையது. இது மரணத்தை ஏற்படுத்தக்கூடிய எய்ட்ஸ், லுக்கேமியா, பார்க்கின்சன்ஸ் நோய், மற்றும் போலியோ போன்ற பல்வேறு நோய்களுக்கு மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள் கண்டுபிடிப்பதற்காக Hela செல்கள் மிகப்பெரிய அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அதிலும் அண்மையில் தான் என்று ஹென்ரீட்டாவின் 70வது நினைவு தினம் கொண்டாடப்பட்டது. அதில் ஹென்ரீட்டா மருத்துவ உலகிற்கு அளித்த பங்களிப்பிற்காக உலக சுகாதார மையம் அவரை பாராட்டியது.

அதோடு மட்டுமின்றி அவரின் அனுமதி இல்லாமலேயே செல்களை எடுத்து ஆய்வு செய்தது தவறானது என்று கூறியுள்ளது. அதனால் இதனை வரலாற்றுப் பிழை என்றும் பதிவு செய்துள்ளது. மேலும் அவருடைய அடையாளத்தை மறைத்தது தவறு என்றும் தெரிவித்துள்ளது. குறிப்பாக மருத்துவ உலகில் தனது பங்களிப்பை கொடுத்த ஹென்ரீட்டாவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக Henrietta Lacks Legacy என்ற இன்ஸ்டாகிராம் கணக்கு துவக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து சிலர் கருத்து கூறியதில் “ஆப்பிரிக்கா வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணின் செல்களை அனுமதியின்றி பயன்படுத்தியது பெருந்தவறாகும்.

அதிலும் ஹென்ரீட்டா கருப்பின பெண் என்பதால் அவரின் உடல் தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக மருத்துவத்துறையின் மீது அவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு மாறாக இதுபோன்ற செயல் நடந்து இருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உலக சுகாதார மையத்தின் அறிக்கைகள், 70,000த்திற்கும் மேற்பட்ட மருத்துவ ஆய்வுகளில் Hela செல்கள் அதிக அளவு பயன்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 50 மில்லியன் மெட்ரிக் டன் Hela செல்கள் உலக முழுவதும் வழங்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us