பயங்கரவாதிகளின் தாக்குதல்…. அப்பாவி மக்கள் 17 பேர் பலி…. தீவிர விசாரணயில் பாதுகாப்பு படை….!!

 

மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ ஜனநாயக குடியரசில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. குறிப்பாக காங்கோ குடியரசின் அருகே அமைந்துள்ள உகாண்டா நாட்டில், கூட்டணி ஜனநாயக படைகள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு இரு நாடுகளிலும் உள்ள பொதுமக்கள் உட்பட பாதுகாப்பு படையினரின் மீதும் பல்வேறு தாக்குதல் நடத்தி வருகின்றது.

அதுமட்டுமின்றி, கடந்த 2017 ஆம் ஆண்டில் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் இந்த கூட்டணி ஜனநாயக படை இணைந்தது. இதனால் கூட்டணி ஜனநாயக படைகளை, பயங்கரவாதிகள் என காங்கோ அரசு அறிவித்தது. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழித்து இரு நாடுகளிலும் அரசியல் நிலைத்தன்மை மீட்க ஐ.நா மற்றும் உள்நாட்டுப்படை இணைந்து தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர். இதனால் கிளர்ச்சியாளர்களும் பாதுகாப்பு படையினரும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

மேலும் காங்கோவின் பெனி நகரில் கலிம்போ, டொயோ ஆகிய கிராமங்கள் அமைந்துள்ளது. இந்த நிலையில் நேற்று இரு கிராமங்களிலும் பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். பின்னர், அங்கிருந்த பொதுமக்கள் மீது பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலில் பொதுமக்கள் 17 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து காங்கோ பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Contact Us