“வாடா வீட்டை விட்டு ஓடிடலாம்” -17 வயது பையனோடு கள்ள உறவு கொண்ட 30 வயது பெண்ணுக்கு நேர்ந்த கதி

 

உறவுக்கார வாலிபர் ஒருவரோடு ஒரு பெண்னுக்கு ஏற்பட்ட கள்ள உறவால் அந்த பெண் கொலை செய்யப்பட்டார் .

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள பனசங்கரி பகுதியில் வசிக்கும் ஒரு 35 வயதான தொழிலதிபருக்கு 30 வயதில் ஒரு மனைவி இருக்கிறார் .அந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகளும் இருக்கின்றனர் .இந்நிலையில் அந்த கணவரின் உறவுக்கார 17 வயதான டீனேஜ் பையன் அடிக்கடி அந்த வீட்டிற்கு வருவார் .அந்த நேரத்தில் அந்த உறவுக்கார பையனோடு அந்த தொழிலதிபர் மனைவிக்கு கள்ள உறவு ஏற்பட்டது .இதனால் அவரின் கணவர் வீட்டில் இல்லாத நேரத்தில் அந்த பெண் அந்த டீனேஜ் பையனோடு உல்லாசமாக இருந்தார் .இந்த கள்ள உறவு விவகாரம் நாளடைவில் அந்த பெண்ணின் கணவருக்கு தெரிய வந்தது .அதனால் அடிக்கடி வீட்டில் சண்டையும் வந்தது .
அதனால் அந்த பெண் அந்த பையனிடம் நாம் வீட்டை விட்டு ஓடி விடலாம் என்று கூறினார் .ஆனால் அந்த சிறுவன் அதற்கு சம்மதிக்கவில்லை .இதனால் அவர்களுக்குள் தகராறு வந்துள்ளது .இந்த தகராறின் போது அந்த பெண்ணின் கணவர் வரும் சத்தம் கேட்டதும், அந்த பெண் அந்த சிறுவனை தன்னோடு ஓடி வருமாறு கேட்டார் ,ஆனால் அவன் வராததால் அந்த பெண் அந்த சிறுவனை அங்கிருந்த ஒரு கத்திரிக்கோலால் தாக்கினார் .அதனால் அந்த சிறுவன் கோபம் கொண்டு ,அந்த பெண்ணை அங்கிருந்த ஒரு கத்தியால் குத்தி கொலை செய்து விட்டார் .பிறகு ஒரு ஒரு பெட்ஷீட்டால் அந்த பெண்ணை தீ வைத்து கொளுத்தினார் .
அக்கம் பக்கத்தினர் அந்த வீட்டில் புகை வருவதை கண்டு போலீசில் புகார் தந்தனர் .போலீஸ் அந்த வீட்டிற்கு வந்து அங்கிருந்த சிறுவனை கைது செய்தனர் .மேற்கொண்டு அந்த பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர் .

Contact Us