“கொரோனா தடுப்பூசி சான்றிதழ்” இனி இவர்களுக்கு மட்டும்தான்…. பிரித்தானியாவில் வெளியான தகவல்….!!

 

பிரித்தானியாவில் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு நாளொன்றுக்கு 50 ஆயிரத்துக்கும் அதிகமாக உயர்ந்து வருகிறது. ஆகவே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மெதுவாக அதிகரிக்கலாம். இது மிகுந்த ஆபத்தையும், மோசமான விளைவையும் ஏற்படுத்தக்கூடும். இதனால் மக்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிகளை செலுத்துவதற்கு அரசாங்கம் துடித்து வருகிறது. இந்நிலையில் இனிவரும் தினங்களில் 3 டோஸ்களையும் செலுத்தினால் மட்டுமே முழுமையாக தடுப்பூசி போட்டவர்களாக ஏற்றுக்கொள்ளப்படும்.

மேலும் 3 டோஸ் செலுத்தி கொண்டவர்களுக்கு மட்டுமே தடுப்பூசி சான்றிதழ் வழங்கப்படும் என்ற முடிவிற்கு அரசாங்கம் வந்துள்ளது. இந்த புதிய விதிமுறை அடுத்த வருடம் முதல் நடைமுறைக்கு வர இருக்கின்றது. அதன்படி அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பும் பிரித்தானியர்கள் கண்டிப்பாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்த வேண்டியது கட்டாயமாகும். இதுகுறித்து பராமரிப்பு அமைச்சர் கில்லியன் கீகன் கூறியபோது “முழு தடுப்பூசி என்ற வரையறை- இப்போது மக்கள் PCR சோதனை செய்யாமல் பயணம் செய்ய அனுமதிக்கிறது.

ஆகவே PCR சோதனைகள் செய்யாமல் நாடுகளுக்குள் நுழைய மக்களுக்கு விரைவில் 3 ஜாப் தேவைப்படலாம்” என்று அவர் கூறியுள்ளார். தற்போது 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் மற்றும் 16 வயதிற்கு மேற்பட்ட மருத்துவ ரீதியாக பாதிக்கப்படகூடியவர்கள் பூஸ்டர் தடுப்பூசிக்கு தகுதி உடையவர்கள் ஆவர். ஆனால் அதை பெற அவர்கள் 2-வது டோஸீக்குப் பிறகு ஆறு மாதங்கள் காத்திருக்க வேண்டும். இதில் விடயங்களை விரைவுபடுத்த அரசாங்கம் இந்த இடைவெளியை தளர்த்த பார்க்கின்றது. எனவே அதிக மக்கள் பூஸ்டர்களை விரைவில் பெறுவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்து வருகின்றது.

Contact Us