“விளையாடிய சிறுமியை களவாடி… “-பக்கத்து வீட்டுக்காரரிடம் சிக்கிய சிறுமி

 

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள ராஜேந்திரநகர் பகுதியில் கடந்த அக்டோபர் 15ம் தேதி அன்று 4 வயது சிறுமி தனது வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்தார் . அப்போது அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் 23 வயதான வாலிபர் அந்த சிறுமியை தனது வீட்டிற்கு வருமாறு கூப்பிட்டார் .அவர் அடிக்கடி அந்த சிறுமியின் வீட்டிற்கு வருபவர் என்பதால் அந்த சிறுமி அவரோடு அவரின் வீட்டிற்கு சென்றார் .பிறகு அங்கு அழைத்துச் சென்ற அந்த வாலிபர் அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார் .பிறகு அந்த சிறுமியை அவரின் வீட்டில் விட்டு விட்டு அவர் ஓடி விட்டார்

அதன் பிறகு வெளியே வேலைக்கு போய் விட்டு திரும்பிய அவரின் பெற்றோருக்கு இந்த விஷயம் அந்த சிறுமி மூலம் தெரிய வந்தது .அதன் பிறகு அந்த சிறுமியின் பெற்றோர் பக்கத்து வீட்டு வாலிபர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர் .போலீசார் வழக்கு பதிந்து அந்த வாலிபரை கைது செய்தனர்
இப்போது அந்த குற்றவாளி மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Contact Us