தொப்பியை இறுக்கிப் பிடித்த போப் ஆண்டவர்: தொப்பியை கேட்டு அடம் பிடித்த சிறுவன் வீடியோ வைரல் ..

இப்படி தான் சிலவேளை, கண் தெரியாத நபர்களுக்கு உதவி செய்வது போல. இல்லையென்றால் பிள்ளையை தூக்கிப் பிடித்து படம் எடுப்பது போல பலர் பெருமை தோடிக் கொள்வார்கள். அது போலவே என்னவோ தெரியவில்லை. வத்திக்கானில், மூளை சரியாக வளராத சிறுவன் ஒருவனை அருகில் வைத்துக் கொண்டு,  ஏதோ உரையாற்ற இருந்தார் போப் ஆண்டவர். ஆனால் அந்தச் சிறுவன் எழுந்து சென்று, போப் ஆண்வர் கைகளைப் பிடித்தான். பின்னர் தொப்பியை தொட்டுப் பார்த்து அதனை களற்ற முயன்றான். உடனே தனது தொப்பியை சரி செய்துகொண்டார் போப் ஆண்வர்.

பின்னர், மீண்டும் போப் ஆண்டவரின் அருகே சென்ற சிறுவன், ஒரு கட்டத்தில், அவர் அணிந்திருக்கும் வெள்ளை தொப்பியை கொடுக்கச்சொல்லி அடம்பிடித்தான்.சிறுவனின் இந்த செய்கையை கவனித்த, நிகழ்ச்சியின் தலைவர், சிறுவனை சமாதானப்படுத்தி தனது இருக்கையில் அமரவைத்தார். அதன்பிறகும் வேகம் குறையாத அந்த சிறுவன், மற்றொருவரை கையை பிடித்து அழைத்து வந்து போப் ஆண்டவரிடம் தொப்பியை வாங்கித் தருமாறு கேட்டதால் அரங்கில் சிரிப்பலை எழுந்தது. இறுதியாக, என்ன செய்தாலும் இந்தச் சிறுவனை சமாதானம் செய்ய முடியாது என புரிந்துக்கொண்ட போப் ஆண்டவர், தனது தொப்பியை கொடுத்ததால், சிறுவனின் ஆசை நிறைவேறியது.

போப் ஆண்டவரின் தொப்பியை அணிந்துகொண்டு, மகிழ்ச்சியுடன் மேடையில் இருந்து இறங்கிய சிறுவனை அனைவரும் ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். சிறுவனின் இந்த குறும்புத்தனங்கள் எதையும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களோ, போப் ஆண்டவரின் பாதுகாவலர்களோ,தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் என்றால் இவர்களாக வாங்கிக் கொண்ட வம்பு இது. பின்னர் போப் ஆண்டவருக்கு வேறு தொப்பி கொடுக்கப்பட்டது.

Contact Us