“சூடு ஏத்தி விட்டு சுருட்டிக்கிட்டு போய்ட்டா” -வீடியோ காலில் ஆபாச பெண்கள் மூலம் நடக்கும் மோசடி

அவர் அசாம், பீகார், ராஜஸ்தான் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் உள்ள பல்வேறு தொலைத்தொடர்பு துறைகளின் போலி ஐடி மூலம் வழங்கப்பட்ட 100 க்கும் மேற்பட்ட மொபைல் போன்கள் மற்றும் 1000 க்கும் மேற்பட்ட சிம் கார்டுகளைப் பயன்படுத்தி இந்த மோசடியை செய்தார் என்று போலீசார் தெரிவித்தனர்
அவர் செக்ஸ் ஆடியோ மற்றும் வீடியோ அரட்டைகளில் ஈடுபடுமாறு பெண்களை வைத்து ,வாலிபர்களையும் வயோதிகர்ளையும் குறி வைத்து இரவில் அழைக்க வைப்பார் .அப்போது அவர்களுடன் அந்த பெண்களை ஆபாசமாக பேச வைத்து அந்த வீடியோ மற்றும் ஆடியோவை ரெக்கர்ட் செய்வார் .பிறகு அதை சமூக ஊடகத்தில் வெளியிடுவதாக அந்த ஆண்களை மிரட்டி அவர்களிடம் பணம் வாங்கி மோசடி செய்தார் .

இந்த வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட அந்த நசீர் , ஒரு ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஒருவரை அவரின் வீடியோவை யூடியூப்பில் போடாமலிருக்க தன்னை ஒரு யூ ட்யூப் அதிகாரி என்று பொய் சொல்லி ரூ.4 லட்சம் கேட்டார் .அதனால் பயந்த அதிகாரி அந்த பணததை கொடுத்துள்ளார் .பிறகு அவர் மீது போலீசில் புகார் தந்தார் .போலீசார் ரகசியமாக கண்காணித்து அந்த நசீரை கைது செய்தனர்

Contact Us