மகளின் காதலனை வீட்டிற்கு அழைத்து அடித்துக்கொன்ற பெற்றோர்

காதலை கைவிட்டு தங்கள் மகனுடன் தங்கள் மகளுடன் இனி பேச கூடாது பழக கூடாது என்று எச்சரித்தும் கேட்காததால் திருமணம் பற்றி பேசலாம் என்று வீட்டிற்கு வரவழைத்து காதலியின் பெற்றோர் காதலனை அடித்து கொலை செய்து இருக்கிறார்கள். போலீசுக்கும் காதலன் வீட்டுக்கு காதலிதான் போன் செய்து கதறி இருக்கிறார். தலைமறைவாக இருக்கும் காதலின் குடும்பத்தினை போலீஸ் தீவிரமாக தேடி வருகிறார்கள்.

கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டம் அலமேலா தாலுகா பெக்கானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி(32). இவரும் அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்திருக்கிறார்கள். இருவரும் அடிக்கடி வெளியில் சென்று காதலித்து வந்துள்ளனர். இந்த விவகாரம் இளம் பெண்ணின் வீட்டிற்கு தெரிய வந்திருக்கிறது.

ரவியும் வேறு மதத்தைச் சேர்ந்தவர் என்பதால் அவருக்கு திருமணம் செய்து கொடுக்க இளம் பெண்ணின் பெற்றோர் மறுத்திருக்கிறார்கள். ரவியை அழைத்து தங்கள் மகளுடன் இனி பேச கூடாது பழக கூடாது என்று எச்சரித்திருக்கிறார்கள். ஆனால் அதன் பின்னரும் அந்த பெண்ணுடன் பேசி காதலித்து வந்துள்ளார் ரவி.

இத்தனை சொல்லியும் கேட்காததால் ஆத்திரமடைந்த பெண்ணின் பெற்றோர் ரவியை தீர்த்துக் கட்டினால்தான் பிரச்சனை தீரும் என்று நினைத்திருக்கிறார்கள். அதன்படி திட்டமிட்டு ரவியிடம் செல்போனில் பேசி திருமண விஷயமாக பேச வேண்டும் வீட்டுக்கு வாருங்கள் என்று அழைத்து இருக்கிறார்கள். அதை உண்மை என்று நம்பி அவன் காதலியும் வீட்டிற்கு சென்றிருக்கிறார்.

காதலியின் தாய், தந்தை உள்ளிட்ட 8 பேர் சேர்ந்து ரவியை சரமாரியாக அடித்து உதைத்திருக்கிறார்கள். இதில் படுகாயமடைந்த ரவி பரிதாபமாக உயிரிழந்திருக்கிறார்.

தன் கண் முன்னே காதலன் கொலை செய்யப்பட்டதை கண்டு காதலி கதறி அழுதிருக்கிறார். காதலி அலமேலா போலீசுக்கு போன் செய்து ரவி கொலை செய்யப்பட்ட தகவலை சொல்லியும் போலீசார் வரவே இல்லை. இதை அடுத்து காதலனின் குடும்பத்திற்கும் விபரத்தை சொல்லியிருக்கிறார். அதற்குள் ரவியின் உடலை ஊருக்கு ஒதுக்குப்புறமாய் சென்று தூக்கி வீசிவிட்டு தலைமறைவாகிவிட்டனர் குடும்பத்தினர். அதன்பின்னர் ரவியின் குடும்பத்தினர் வந்து உடலை கைப்பற்றி கதறி அழுத போது, போலீசுக்கு தகவல் தெரிவிக்க அதன் பின்னர்தான் போலீசார் வந்திருக்கிறார்கள் .

உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது. தலைமறைவாக இருக்கும் காதலில் குடும்பத்தினரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Contact Us