“கேரளாவில் ஒரே பிரசவத்தில் பிறந்த 4 சகோதரிகள்!”.. பிரிட்டனில் செய்த சாதனை..!!

 

கேரளாவைச் சேர்ந்த Joby என்ற செவிலியர், தன் கணவர் Shibu Mathew-உடன் கடந்த 2007 ஆம் வருடத்தில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார். இத்தம்பதி, ஒரே பிரசவத்தில் பிறந்த தங்கள் நான்கு குழந்தைகளையும் உறவினரிடம் விட்டுவிட்டு சென்றிருக்கிறார்கள். அதன்பின்பு, ஒரு வருடம் கழித்து நான்கு குழந்தைகளும் பிரிட்டனுக்கு பெற்றோரிடம் வந்து சேர்ந்துள்ளார்கள்.

Joby செவிலியர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு, இந்தியா மற்றும் ஓமன் நாடுகளில் செவிலியராக பணியாற்றி வந்திருக்கிறார். மேலும் தன் நான்கு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டே, 2014 ஆம் வருடத்திலிருந்து 2017 ஆம் வருடம் வரை பிரிட்டன் நாட்டிலேயே செவிலியர் பட்டபடிப்பை முடித்திருக்கிறார்.

தற்போது, Ipswich என்ற மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். சில வருடங்களுக்கு முன்பு இவர்களின் மகள்களில் ஒருவரான Aleena, தாய் செவிலியர் பட்டப்படிப்பை முடித்து வந்தபோது அணிந்திருந்த உடையை தனக்கு தருமாறு கேட்டிருக்கிறார். அதற்கு, Joby உனக்கும் இந்த உடை ஒரு நாள் கிடைக்கும் என்று கூறியிருக்கிறார்.

அதேபோல், Aneetta, Anjel, Aleena, மற்றும் Aneesha என்ற அவர்களின் 4 பிள்ளைகளும் Suffolk பல்கலைகழகத்தில் செவிலியர் படிப்பை முடித்துவிட்டு, கேம்பிரிட்ஜில் இருக்கும் Royal Papworth செவிலியர் பணியில் சேர்ந்திருக்கிறார்கள். இவர்களின் தந்தை, Shibu Mathew கூறுகையில், “எனக்கு தெரிந்து, NHS-ல் ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு குழந்தைகள் பணியாற்றுவது, எங்கள் குழந்தைகளாகத்தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளார்”.

Contact Us