யாழில் கொடூர சம்பவம்: கணவனால் மனைவிக்கு நேர்ந்த விபரீதம்

யாழில் குடும்பத் தகராறு காரணமாக மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவர் தலைமறைவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் நேற்று மாலை யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் வசிக்கும் கணவன், மனைவிக்கு இடையில் நேற்று மாலை தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் 22 வயதான தனது மனைவியை கத்தியால் குத்திவிட்டு கணவர் வீட்டில் இருந்து வெளியேறி தலைமறைவாகியுள்ளார்.

கணவனின் கத்திக்குத்தால் படுகாயமடைந்த மனைவி வலி தாங்கமுடியாமல் காத்த அவலக் குரல் கேட்டு, அயலவர்கள் வீட்டிற்கு விரைந்து வந்து வலியால் துடித்துகொண்டிருந்த பெண்ணை மீட்டு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில், விசாரணைகளை காங்கேசன்துறை பொலிஸார் முன்னெடுத்துள்ளதுடன், தலைமறைவாகியுள்ள கணவரை கைது செய்ய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளனர்.

Contact Us