பணத்திற்காக இப்படியா பண்ணுவாங்க…. சினிமாவையே மிஞ்சிய சம்பவம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….!!

 

லண்டனை சேர்ந்த Sam Demilecamps (25) விடுமுறைக்காக இத்தாலி சென்றபோது, Monte San Giusto நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 8 நாட்கள் கடத்தப்பட்டு 2 வாரங்கள் கழித்து கடத்தல் கும்பலால் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பிரபல ஊடகம் வெளியிட்ட செய்தியில், “இத்தாலியில் கடந்த அக்டோபர் மாதம் 13 ஆம் தேதி Sam Demilecamps கடத்தப்பட்டார்.

மேலும், அவரை விடுவிக்க 6000 பவுண்டுகள் கேட்கப்பட்டது. பின்னர், Sam-ஐ சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில் போலீசார் மீட்டனர். அதோடு, 3 ஆண்கள் மற்றும் ஒரு பெண் தன்னை கடத்தியதாக Sam கூறினார். இந்த வழக்கை விசாரித்த பிரித்தானிய போலீசார், Sam தன் பெற்றோரிடம் பணம் வாங்கி கடனை அடைக்க நடத்திய நாடகம் என தெரியவந்தது” என்று கூறியது.

இது குறித்து, Sam இன் தந்தை Patrick Demilecamps கூறுகையில், “நாங்கள் இருவரும் நீண்ட நாட்களாக பேசுவது இல்லை. பொதுவாக கடத்தல்காரர்கள், பணைய கைதிகளிடம் மொபைல் போன் கொடுக்கமாட்டார்கள். மொபைல் போன் மூலம் போலீசார் டிராக் செய்ய முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். எனவே 6000 பவுண்ட் கேட்டு மிரட்டிய போது, போலீசாருக்கு தகவல் அளித்த 36 மணி நேரத்தில் கண்டுபிடித்தனர்” என்று கூறினார்.

இந்த சம்பவம் தொடர்பாக, Beliga Gnaga(18), Dona Conte(22), Ahmed Rajraji(21) மற்றும் Aida Carpani(20) ஆகியோரை சந்தேகத்தின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர். தற்போது 4 பேரும் இத்தாலி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, “இது ஒரு ஏமாற்றுவேலை. நாங்கள் அவருக்கு 7,000 யூரோ கடன் கொடுத்தோம். அதை திரும்ப கேட்ட போது, இந்த கடத்தல் நாடகம் அரங்கேற்றப்பட்டது” என்று கூறினர். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெறுவதால், இவர்களை போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

Contact Us