யாழ்.வடமராட்சி கிழக்கு – மாமுனையை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் சகோதரி வீட்டில் சடலமாக மீட்பு.

யாழ்.வடமராட்சி கிழக்கு – மாமுனை பகுதியை சேர்ந்த இளம் குடும்பஸ்த்தர் ஒருவர் சகோதரி வீட்டில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் 3 பிள்ளைகளின் தந்தையான ஆ.ஞானக்குமார் (வயது38) என்பவரே உயிரிழந்துள்ளார். முகமாலை – இத்தாவில் பகுதியில் உள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தவர் இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதன் அடிப்படையில் விசாரணைகள் நடந்து வருகின்றது. மேலும் திடீர் மரண விசாரணை, பீ.சி.ஆர் பரிசோதனை, உடற்கூற்று பரிசோதனை என்பன மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

.

Contact Us