சீனாவில் இதற்கு தட்டுப்பாடு வந்துட்டு…. அவதிப்படும் மக்கள்…. வெளியான தகவல்….!!

 

உலகிலேயே 2-வது பெரிய பொருளாதார நாடாக சீனா விளங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாகவே சீனாவில் நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்றவற்றிற்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சீனாவில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருவதால் மக்கள் பெரும்பாலும் இருட்டில் அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கிடையில் டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களுக்கு ரேஷன் முறையில் குறைந்தளவு மட்டுமே வாகனங்களுக்கு டீசல் விநியோகம் செய்யப்படுகிறது.

இதுகுறித்து ஹெபெய் மாகாணத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் ஒருவர் கூறியபோது “டீசல் விலை உயர்வால் ஏற்கனவே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வருகிறோம். இந்த நிலையில் டீசலுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்கள் அவதிபடுகின்றனர். அதுமட்டுமின்றி எரிவாயு நிலங்களிலும் டீசல் நிரப்ப 100 யுவான் அல்லது 15.70 டாலர் கட்டணம் விதிக்கின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் இருந்து இன்று வரை சுமார் 55 சதவீதம் டீசல் விலை உயர்ந்துள்ளது” என்று அவர் கூறினார்.

Contact Us