தனது அழகை காட்டி காவலாளியை மயக்க- அம்மா காரி சுவர் ஏறிக் குதித்து சிறையில் இருந்து தப்பினார் !

21 வயது அழகி தனது உடல் அழகை காட்டி சிறை காவலாளியை மயக்க. அந்த நேரத்தில் ஜன்னல் வழியாக கயிறைப் போட்டு சிறையில் இருந்து தப்பியுள்ளார் இந்த அழகியின் அம்மா. மகள் தனது அம்மாவை சிறையில் இருந்து தப்ப வைக்க, என்ன நாடகம் ஆடி இருக்கிறார் என்று பாருங்கள். இன்ஸ்டாகிராமில் மிக மிக பிரபல்யமாக இருப்பவர் மற்றும் மாடல் அழகி தான், மேர்லானா. இவரது அம்மா ஒரு அரசியல்வாதி. கொலம்பியா நாட்டில் நடந்து முடிந்த ஒரு மாவட்ட தேர்தலில், மோசடி வாக்குகளை பதிவு செய்தார் என்ற குற்றத்தில் அவருக்கு 15 வருட சிறை தண்டனை கிடைத்தது. மாடல் அழகி தனது அம்மாவை எப்படி என்றாலும் காப்பாற்ற நினைத்து ஒரு திட்டத்தை தீட்டியுள்ளார். ஒரு கயிறு ஒரு மோட்டார் சைக்கிள்… இவை இரண்டும் தான் அவர் கையில் எடுத்துக் கொண்ட ஆயுதம்…

இதேவேளை பல் வலி என்று நாடகம் ஆடிய அம்மா. சிறையில் உள்ள பல் வைத்தியரிடம் சென்றுள்ளார். அங்கிருந்து அவர் தப்பிக்க ஏதுவாக ஜன்னல் வழியாக அந்த கயிறு தொங்கவிடப்பட்டு இருந்துள்ளது. இதேவேளை மாடல் அழகி, தன் அழகை காட்டி சிறை காவலாளிகளை மயக்க. அந்த நேரம் பார்த்து, அம்மா ஜன்னல் வழியாக குதித்து. வெளியே நின்று இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு தப்பியோடிவிட்டார். ஆனால் மாடல் அழகியையும் பல் வைத்தியரையும் பொலிசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

Contact Us