50 பில்லியனியர் நண்பர்களோடு பில்-கேட்ஸ் கொண்டாட்டம்: அனைவருக்கு ஹெலிகப்டர் சேவை: தனித் தீவில் கொண்டாட்டம் !

மைக்ரோ சாஃப்ட் நிறுவுனர் பில்-கேட்ஸ் தனது 66வது பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடி, பணத்தை வாரி இறைத்துள்ளார். முதலில் தன்னுடைய சொந்த சொகுசுக் கப்பலுக்கு அனைவரையும் ஹெலி மூலம் வரவளைத்துள்ளார். குறித்த கப்பலை பில்-கேட்ஸ் வாடகைக்கு விடுவது உண்டு. 7 நாட்களுக்கு 2 மில்லியன் பவுண்டுகள் அதன் வாடகை. இது இவ்வாறு இருக்க, அவரது நெருங்கிய 50 நண்பர்களில், அமேசன் நிறுவுனரும் அடங்குகிறார். பில்-கேட்ஸ்சின் சொத்து மதிப்பு 136B பில்லியன் டாலர்கள் ஆகும். இதேவேளை அமேசன் நிறுவுனரின் சொத்து மதிப்பு 195B பில்லியன் டாலர்கள் ஆகும். இப்படி உலகில் உள்ள மிக மிகப் பெரிய பணக்காரர்கள் 50 பேரை பில் கேட்ஸ் அழைத்திருந்தார். அந்த சொகுசுக் கப்பலில் பார்டி ஆரம்பித்து. பின்னர்..

துருக்கி நாட்டில் உள்ள தனித் தீவு ஒன்றில் அமைந்துள்ள ஹோட்டலில் அடுத்த நாள் பார்டி தொடர்ந்துள்ளது. மொத்தமாக பல மில்லியன் பவுண்டுகளை அவர் பிறந்த நாளுக்காக செலவு செய்துள்ளார். வந்து போல அனைத்து வி.ஐ.பி மார்களின் பாதுகாப்பு. அவர்களது போக்குவரத்து செலவு எல்லாமே பில் கேட்ஸ் தான் பார்த்துக் கொண்டாராம்.

Contact Us