“கடனை கட்டாத பெண்னின் உடலை ..”ஒரு வங்கி ஊழியரிடம் சிக்கிய பெண்

மகாராஷ்டிராவின் நவி மும்பையில் ரபேல் பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் 38 வயதான சமாதானன் லாண்ட்வே என்ற நபர் பணிபுரிந்தார் .அந்த நபருடன் 36 வயதான ஷிடல் நிகம் என்ற பெண்ணுக்கு கள்ள உறவு இருப்பதாக சந்தேகம் உள்ளது .இந்நிலையில் அந்த பெண் தன்னுடைய கணவருக்கு அந்த வங்கி ஊழியர் லாண்ட்வெயிடம் தனி நபர் கடனாக 6.5 லட்ச ரூபாய் வாங்கி கொடுத்தார்.

ஆனால் அந்த பெண்ணின் கணவர் அந்த கடன் தவணையை சரியாக செலுத்தவில்லை .இதனால் அந்த லண்ட்வே அந்த நிகாமிடம் கடனை கட்டவில்லையென்றால் உயிரை விட்டு விடு என்று கூறினார் .அதனால் அந்த பெண்ணிடம் ஒரு தற்கொலை குறிப்பையும் அந்த வங்கி ஊழியர் லாண்ட்வெ எழுதி வாங்கிக் கொண்டார் .அந்த தற்கொலை குறிப்பில் தான் கடன் தவணையை செலுத்த தவறியதால் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியுள்ளார்.

அதன் பிறகு அந்த லாண்ட்வே கடந்த 21ம் தேதி அந்த பெண்ணை அடித்து கொலை செய்தார் .பிறகு அவரின் உடலை அங்குள்ள ஒரு மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது போல செட்டப் செய்ய முயன்றார் .ஆனால் விசிறி ப்ளேடு உடைந்ததால் அவர் அந்த பெண்ணின் பிணத்தை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டார் .பிறகு போலீசுக்கு தகவல் தெரிந்து அந்த பெண்ணின் பிணத்தை கைப்பற்றி விசாரணை மேற்க்கொண்டனர் .அப்போது அந்த லாண்டவே அவரை கடனை கட்டாததால் கொலை செய்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்

Contact Us