கமல் முன்னிலையில் அடித்துக் கொண்ட போட்டியாளர்கள்.. ரணகளமான பிக் பாஸ் வீடு

பிக் பாஸ் வீட்டில் யாருடனும் ஒத்துப்போகாமல் தனியாகவே வளம் வரும் ஒரே போட்டியாளர் அக்ஷரா மட்டுமே. இவருக்கும், பிரியங்கா விற்கும் சில நாட்களாக ஒரு அமைதியான போர் பிக்பாஸ் வீட்டில் நடந்து வருகிறது.

சற்று முன்பு வெளியான ப்ரோமோ விழும் இந்தப் பகை அப்பட்டமாக தெரிந்தது. கமல் போட்டியாளர்கள் இடம் யாருக்கு என்ன பொருந்தும் என்று ஒரு சீட்டை எடுத்து கொடுக்க சொல்கிறார்.

பிரியங்கா அக்ஷராவுக்கு, கன்பியூஸ் என்ற சீட்டை எடுத்துக் கொடுக்கிறார். அதற்கு பதிலடியாக அக்ஷராவும், பிரியங்காவிற்கு மற்றவர்களை காயப்படுத்துபவர் என்ற சீட்டை எடுத்து சிரித்துக்கொண்டே கொடுக்கிறார்.

சீட்டை வாங்கிய பிரியங்காவின் முகம் சற்றே கோபமானது போல் தெரிந்தது. இதற்கு அடுத்தபடியாக அந்நியன் விக்ரம் கெட்டப்பில் நிரூப் வந்தார். அவரும் அக்ஷராவுக்கு, போலியானவர் என்ற சீட்டை கொடுத்தார்.

இதைப் பார்த்து கடுப்பான அக்ஷரா கமல் இருக்கிறார் என்பதையே மறந்து விட்டு நிரூப்புடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். என்னால் உன்னை மன்னிக்க முடியாது என்று சண்டையிடுகிறார்.

இதை கமல் அமைதியாக கவனித்துக் கொண்டிருக்கிறார். நேற்று அண்ணாச்சிக்கு, கமல் அட்வைஸ் செய்ததைப் போல், இன்று அக்ஷராவிற்கு என்ன சொல்லுவார் என்று ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

சமீபகாலமாக அக்ஷரா எதற்கெடுத்தாலும் அழுது கொண்டே இருக்கிறார். இதை வைத்து மக்கள் மனதில் இடம் பிடிக்கலாம் என்று நினைத்தால் சீக்கிரம் வீட்டை விட்டு வெளியேற வேண்டியதுதான் என்று ரசிகர்கள் கமெண்ட் கூறுகின்றனர்.

https://youtu.be/enVUNNa9TzE

Contact Us