2 ரயில்கள் மோதி விபத்து… ஏராளமானோர் படுகாயம்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி தகவல்….!!

 

இங்கிலாந்து நாட்டின் சாலீஸ்பரி ரயில் நிலையம் அருகே உள்ள சுரங்கப்பாதையில் வேகமாக சென்ற ரயில் தடம் புரண்டதில் 2 ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சிக்கிக்கொண்டு பலர் படுகாயம் அடைந்தனர். பின்னர், விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படை வீரர்கள் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து, ரயிலில் சிக்கிய பயணிகள் அனைவரும் ஜன்னல் வழியாக பத்திரமாக வெளியே மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் ரயில் ஓட்டுனர் மாட்டிக்கொண்டதால் அவருக்கு அவரச மருத்துவ சேவை பிரிவினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். அதோடு, விபத்தில் காயம் அடைந்த 17 பேரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

மேலும், லண்டன் வீதிக்கு அருகில் உள்ள சவுத் வெஸ்டர்ன் ரயில்வே மற்றும் கிரேட் வெஸ்டர்ன் சேவையை சேர்ந்த 2 ரயில்கள் தான் விபத்தில் சிக்கி கொண்டன. இந்த நிலையில், விபத்திற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், ரயில் அடையாளம் தெரியாத ஏதோ ஒரு பொருளை இடித்ததாக தகவல் தெரிய வந்துள்ளது.

Contact Us