கொழும்பில் மக்களால் கொல்லப்பட்ட கணவன்: சடலத்தை ஏற்கமறுத்த மனைவி

 

கொழும்பில் மக்களால் அடித்து கொலை செய்யப்பட்ட கொள்ளையர் ஒருவரின் சடலத்தை ஏற்றுக்கொள்ள மனைவி மறுப்பு தெரிவித்துள்ளார். முல்லேரியா, மாலிகாகொடெல்ல பிரதேசத்தில் வீடு ஒன்றில் கொள்ளையடிக்க சென்ற கொள்ளையர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட கொள்ளையரின் சடலத்தை ஒப்படைக்க சென்ற போது அதனை ஏற்க முடியாதென அவரது மனைவி தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் சடலத்தை அவரது சகோதாரியிடம் ஒப்படைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கொலை செய்யப்பட்டவர் முல்லேரியா பிரதேசத்தை சேர்ந்த சத்துர மதுரங்க என அழைக்கப்படும் மதுரங்க என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Contact Us