“உலகிலேயே மிகக்குறைவான பெட்ரோல் விலை!”.. எந்த நாட்டில்..? வெளியான தகவல்..!!

இந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விலை சிறிது குறைந்திருந்தது. எனினும், அதன் பின்பு மிக அதிகமாக விலை உயர்ந்து விட்டது. இந்நிலையில், உலக நாடுகளிலேயே மிக குறைந்த விலையாக, வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1.48 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல், ஈரான் நாட்டில் ஒரு லிட்டர் 5 ரூபாய்க்கும், சிரியா நாட்டில் 17 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சுமார் 25 நாடுகளில் 50 ரூபாய்க்கும் குறைவாகத் தான் ஒரு லிட்டர் பெட்ரோல் விற்கப்படுகிறது. அதாவது, கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யக்கூடிய நாடுகளில் பெட்ரோல் விலை குறைவாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எண்ணெய் இறக்குமதியில் இந்தியா முக்கிய நாடாக இருந்தாலும், மத்திய அரசு அதிகமாக வரி விதிப்பதால் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us