காலை 5 மணிக்கே நரி முகத்தில் முழித்த கோட்டபாய: என்ன செய்தும் பயன் தரவில்லை… போல…

கடந்த 31ம் திகதி கிளாஸ்கோ வந்த கோட்டபாய,  அவருக்கு என்று ஒதுக்கப்பட்ட நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்தார். ஸ்காட் லாந்தில் உள்ள தமிழ் இளைஞர்கள் சிலர் எப்படி மோப்பம் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் துல்லியமாக சித்தப்பா தங்கி இருந்த ஹோட்டலை அடையாளம் கண்டு பிடித்துவிட்டார்கள். என்னடா இவன் திடீரென சித்தப்பா என்று கோட்டாவை கூறுகிறானே என்று யோசிக்கவேண்டாம். டெலிபோனில் பேசும் போது, இந்த கோட் வேட்டை தான் அதிகம் எல்லாரும்  பாவித்தார்கள். சித்தப்பா அங்கே நிற்கிறார்… சித்தப்பா புறப்பட போகிறார் என்று. அதிகாலை 5 மணிக்கே ஹரோவில் இருந்து சென்ற ஒரு பஸ், சித்தப்பா தங்கியிருந்த இடத்திற்கு செல்ல. அங்கே தேசிய கொடியுடன் இறங்கிய தமிழர்கள், திரும்பி போ என்று கோஷமிட்டார்கள்…

அதிகலையில் நரி முகத்தில் முழிப்பது என்பார்கள். அது போல ஜன்னால் எட்டிப் பார்த்த சித்தப்பா… முதலில் பார்த்தது தேசிய கொடியை தான். பின்னர் பொலிசார் குவிக்கப்பட்டதும். சித்தப்பா பின் வாசல் வழியாக,  ஒரு சில்வர் கலர் மேசிடிஸ்சில் காரில் ஏறிச் சென்றவிடையமும் யாவரும் அறிந்தது தான். உச்சி மாநாட்டை பாவித்து. உலகத் தலைவர்களை சந்தித்து. கடன் கேட்க்கவும், இலங்கையில் முதலீடு செய்யக் கோரிக்கை விடுப்பது தான் சித்தப்பாவின் முழு நோக்கமாக இருந்ததாம்.. அத்தோடு சீன அதிபரை சந்திக்க முடியும் என்று சித்தப்பா போட்ட கணக்கு சிக்கி விட்டது.

காரணம் சீன அதிபர் குறித்த உச்சி மாநாட்டிற்கு வரவில்லை. மேலும் சொல்லப் போனால்,  இந்திய பிரதமர் மோடி கண்டு கொள்ளவே இல்லை. அமெரிக்கா……சொல்லவே தேவை இல்லை. சீனா பக்கம் சாய்ந்து உலகில் உள்ள பல நாடுகளின் எதிர்ப்பை மட்டுமே, … சித்தப்பா சம்பாதித்து வைத்துள்ளார்.  இதனால் பல உலக தலைவர்கள் அவரை கண்டு கொள்ளவே இல்லை.

இறுதியாக நோர்வே நாட்டு அதிகாரிகளை மற்றும் அரபு நாட்டு அதிகாரிகளை மட்டுமே சந்திக்க முடிந்தது. ஒரு வகையில் சித்தப்பாவின் பயணம் படு வேஸ்ட் என்கிறார்கள் கொழும்பில் உள்ள, அவரது சொந்த கட்சி உறுப்பினர்கள்.  நினைத்ததை செய்ய முடியவில்லையாம்.

Contact Us