நைஜீரியாவில் பயங்கரம்!”.. அதிவேகமாக வந்த டேங்கர் லாரி ஆட்டோக்கள் மீதி மோதி கொடூர விபத்து.. 6 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு

 

 

நைஜீரிய நாட்டில் சாலைகள் மோசமாக இருப்பது மற்றும் அதிவேகமாக செல்லும் வாகனங்கள் போன்றவற்றால் விபத்துக்கள் அதிகமாக ஏற்படுகிறது. இந்நிலையில், நைஜீரியாவின் எனுகு நகரத்தில் இருக்கும் ஒரு சந்தைப் பகுதியில் நின்ற சில ஆட்டோக்களில் பயணிகள் ஏறிக் கொண்டிருந்தனர்.

அந்த சமயத்தில் தண்ணீரை ஏற்றி வந்த டேங்கர் லாரி அதிவேகத்தில் வந்து சாலையோரத்தில் நின்ற ஆட்டோக்கள் மீது தாறுமாறாக மோதியது. இக்கொடூர விபத்தில் ஆட்டோக்கள் நசுங்கி விட்டது. மேலும், அந்த ஆட்டோக்களில் இருந்த ஆறு நபர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகினர்.

மேலும் மூவர் பலத்த காயமடைந்துள்ளனர். சம்பவயிடத்திற்கு சென்ற காவல்துறையினர் விபத்து தொடர்பில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். முதற்கட்ட விசாரணை மூலம், டேங்கர் லாரி பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்ததால் விபத்து ஏற்பட்டதாக தெரியவந்திருக்கிறது. மேலும், விபத்திற்கு பின் டேங்கர் லாரியின் ஓட்டுனர் தப்பி சென்றதால் அவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

Contact Us