திருகோணமலையில் ஆட்டோ இடித்து ஒருவர் பலியான CCTV காட்சி: அப்படியே விழுந்தவர் தான் !

திருகோணமலை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட திருகோணமலை புல்மோட்டை என்.சீ வீதி முருகாபுரி சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக திருகோணமலை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.  இவ்வாறு விபத்தில் உயிரிழந்தவர் திருகோணமலை சாம்பல்தீவு பிரதேசத்தினை வசிப்பிடமாக கொண்ட தனியார் காப்புறுதி நிறுவனமொன்றில் கடமையாற்றும் மூன்று பிள்ளைகளின் தந்தையான என்.பிரபாகரன் (58) என திருகோணமலை தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் விபத்து தொடர்பில் சி.சி.டீ.வி காணொளி பெறப்பட்டுள்ளபட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை தலைமையக பொலிசார் மேற்க்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Contact Us