பிறந்த குழந்தையின் பின்பகுதியில்…. 12 செ.மீ நீள வால்…. பிரபல நாட்டில் அதிர்ச்சி….!!

பிரேசிலின், Fortaleza நகரில் உள்ள சபீன் குழந்தைகள் நல மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இது குறித்து மகிழ்ச்சி அடைந்த தாய், குழந்தையின் பின்பகுதியில் வால் ஒன்று முடிவில் பந்து போன்ற அமைப்புடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இந்த வால் 12 cm நீளமும், நுனியில் 4 cm விட்டத்தில் பந்து போன்றும் இருந்தது.

மேலும், மருத்துவர்கள் குறிப்பிட்டதற்கு 35 வாரங்கள் முன்னதாகவே எந்தவித சிக்கலும் இன்றி குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் வாலை அகற்ற மருத்துவர்கள் ‘அல்ட்ராசவுண்ட் ஸ்கேன்’ பரிசோதனை செய்தனர். அப்போது, குழந்தையின் வால் நரம்பு மண்டலத்துடன் இணையாமல் இருந்ததால் சிக்கல் இல்லாமல் இருந்தது. பின்னர், பெற்றோர்களின் சம்மதத்தோடு அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வாலை அகற்றினர்.

இந்த சம்பவம் அந்நாட்டு மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், இந்தியாவிலும் அர்ஷித் அலி கான் என்ற ஒரு குழந்தை 14 வயதாகும் வரை வாலுடனே இருந்துள்ளான். அந்த சிறுவனை அனுமானின் மறுபிறவி என மக்கள் வணங்கி வந்த நிலையில் சிறுவனுக்கு விருப்பம் இல்லாததாலும், தொந்தரவாக இருந்ததாலும் மருத்துவர்கள் வாலை அகற்றி உள்ளனர்.

Contact Us