“தீவிரவாதிகளின் உயிரியல் தாக்குதலுக்கு தயாராக இருக்க வேண்டும்!”.. உலக தலைவர்களுக்கு பில்கேட்ஸ் எச்சரிக்கை..!!

கோடீஸ்வரான பில்கேட்ஸ், தீவிரவாதிகளின் பெரியம்மை காய்ச்சல் தாக்குதலை சந்திக்க உலக நாட்டின் தலைவர்கள் தயார் நிலையில் இருக்கவேண்டும் என்று கூறியிருக்கிறார். மேலும் உலக சுகாதார மையம் பெருந்தொற்றை சந்திக்க பில்லியன் டாலர்கள் கட்டமைப்புடைய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

இது குறித்த ஆய்வுகளுக்கு நிச்சயம் அதிகம் செலவாகும். எனினும், அது அதிக பலனைத் தரும் என்று பில்கேட்ஸ் கூறியிருக்கிறார். அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் அதிகமாக செலவு செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். இதனால், உலக நாடுகள் அடுத்து வரவுள்ள தொற்றுநோய்க்கு தயாராக மாறிவிடும் என்று கூறியிருக்கிறார்.

உலக சுகாதார மையம் மேற்கொள்ளும் அந்த முயற்சிக்கு வருடத்திற்கு ஒரு பில்லியன் டாலர் தொகை தேவைப்பட வாய்ப்பிருக்கிறது. வருங்காலத்தில் தீவிரவாதிகள் உயிரியல் ஆயுதங்களை பயன்படுத்த வாய்ப்புகள் அதிகம். நாம் அதனை சந்திக்க தயாராகி விடவேண்டும். பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் விமான நிலையங்களில் பெரியம்மை காய்ச்சலை பயங்கரவாதிகள் பரப்பக்கூடிய அபாயம் உள்ளது.

அதற்காக அவர்கள் தயாராகி வருகிறார்கள். சுமார் 10 விமான நிலையங்களில் ஒரே சமயத்தில் இதுபோன்ற தாக்குதல் மேற்கொள்ளப்பட்டால் நாம் என்ன செய்யமுடியும்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Contact Us