காணாமல்போன பள்ளி மாணவி…. தீவிரமாக தேடும் பணி…. இங்கிலாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சம்பவம்….!!

இங்கிலாந்தில் உள்ள லீசெஸ்டர்ஷையரில் ஏர்ல் ஷில்டன் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த நவம்பர் 3 ஆம் தேதி இரவு அன்று 14 வயதான மெக்கென்சி டெய்லர் என்னும் பள்ளி மாணவி காணாமல் போயுள்ளார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் 3 நாட்களாக மாணவியை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் அந்த மாணவியின் புகைப்படம் மற்றும் அடையாளங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

அதில் “கடந்த புதன்கிழமை இரவு லீசெஸ்டர்ஷையரில் ஏர்ல் ஷில்டன் பகுதியில் மினி மவுஸ் லோகோவுடன் கருப்பு நிற கத்தரிக்கப்பட்ட டி-ஷர்ட்டை அணிந்திருந்தார். மேலும் அவர் கருப்பு லெகின்ஸ்அணிந்திருந்தார் என்றும் அதில் ‘கால்வின்’ என எழுதப்பட்டிருக்கும். அவர் மெல்லிய தோற்றத்துடன் கருப்பு முடி மற்றும் பழுப்பு நிற கண்களுடன் காணப்படுவார். இதனை தொடர்ந்து அவர் 5 அடி 5 அங்குல உயரத்தில் இருப்பார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லீசெஸ்டர்ஷையர் காவல் துறை செய்தி தொடர்பாளர் கூறியதாவது “அதிகாரிகள் டெய்லரின் பாதுகாப்பு நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளனர். மேலும் அவரை கண்டறிவதற்கு தீவிரமாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் அவர் வெளியே பயணம் செய்திருக்கலாம் என்றும் தகவல் கிடைத்துள்ளது. குறிப்பாக டெய்லரின் இருப்பிடம் குறித்து ஏதேனும் தகவல் அறிந்தவர்கள் உடனே ‘நவம்பர் 3 நடந்த சம்பவம் 653’ என்று சுட்டிக்காட்டி 101 என்ற எண்ணை அழைக்கவும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Contact Us