போட்ரா வெடிய, மூன்றே நாளில் ரூ. 150 கோடி வசூல்: அண்ணாத்த சாதனை மேல் சாதனை

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோர் நடித்த அண்ணாத்த படம் நவம்பர் 4ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. படம் வெளியான முதல் நாள் உலக அளவில் ரூ. 70.19 கோடியும், இரண்டாவது நாள் ரூ. 42.63 கோடியும் வசூலித்தது.

இரண்டே நாளில் ரூ. 100 கோடி வசூல் செய்துவிட்டது அண்ணாத்த என்று ரஜினி ரசிகர்கள் சந்தோஷப்பட்டார்கள். இந்நிலையில் அவர்களுக்கு மேலும் ஒரு நல்ல செய்தி வந்திருக்கிறது.

அதாவது படம் ரிலீஸான மூன்றே நாட்களில் உலக அளவில் ரூ. 146.53 கோடி வசூலித்துவிட்டது அண்ணாத்த.

மூன்றே நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்வது அதுவும் இந்த கொரோனா நேரத்தில் வசூல் வேட்டை நடத்துவது எல்லாம் சாதாரண விஷயம் அல்ல.

அண்ணாத்த படம் ஓடும் தியேட்டர்களில் நேற்று கூட கூட்டம் நிரம்பி வழிந்தது. மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து படம் பார்த்தனர். ஒரு சில குடும்பங்களில் மூன்று தலைமுறையினர், 4 தலைமுறையினர் எல்லாம் வந்திருக்கிறார்கள்.

அண்ணாத்த படத்தை பார்க்க குட்டீஸ் கூட்டம் கூட அதிகம் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us