இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடிக்க என்னால் முடியும்: கோட்டபாய !

ராணுவத்தினரைக் கொண்டு ஒருவகையான பசளையைத் தயாரித்துள்ள கோட்டபாய. அதனை விவசாயிகள் நிச்சயம் பாவிக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தி வருகிறார்கள். ஆனால் இது என்ன பசளை என்று சரியாக தெரியாமல், எம்மால் பாவிக்க முடியாது. பயிர்களை நாசம் செய்ய முடியாது என்று விவசாயிகள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் இவர் பேச்சோ வேற மாதிரி இருக்கு. மிரட்டும் தொணியில் அவர் பேசிய விடையம் இங்கே…

இராணுவத்தினரைக் கொண்டு விவசாயிகளின் கழுத்தைப் பிடித்து, சேதனப் பசளையை பயன்படுத்த வைப்பதற்கு தன்னால் முடியும் என்று தெரிவித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, அவ்வாறு பலத்தை பிரயோகிப்பதற்குத் தான் விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். புதிதாக அபிவிருத்தி செய்யப்பட்ட 1,500 வீதிகளை ஒரே நாளில் மக்கள் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வின் பின்னர், நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.நான் இராணுவ ஆட்சியாளராக வருவேன் என்று எதிர்பார்த்து மக்கள் எனக்கு வாக்களித்தனர். ஓர் இராணுவ அதிகாரியைப் போல மக்களை கழுத்தைப பிடித்து ஆட்சி செய்ய முடியும், ஆனால் நான் அப்படி இல்லை என்றார்.

அப்படி நாட்டை ஆள விரும்பவில்லை. நான் ஆட்சிக்கு வந்தால் ஜனநாயகம் அழிந்துவிடும் என்று சிலர் கூறுகின்றனர், ஆனால் அவ்வாறு பலத்தை பிரயோகிக்க நான் விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டார்.‘நல்லாட்சி’ அரசாங்கத்தின் கீழ், முன்னாள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் பாரிய பரிவாரங்களுடன் பயணம் செய்திருந்தனர் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்த தாம் விரும்புவதாக தெரிவித்தார்.ஐக்கிய நாடுகள் சபையின் மாநாட்டில் கலந்துகொண்டபோது, ​​தனது மனைவியுடன் சாதாரண ஹோட்டலில் தங்கியதாகவும் மனைவியின் விமான டிக்கெட் மற்றும் ஹோட்டல் தங்குவதற்கு தான் பணம் செலுத்தியதாகவும் சுட்டிக்காட்டினார்.

தன்னுடன் 7 பேர் மட்டுமே பயணம் செய்தாகவும் முந்தைய ஜனாதிபதிகள் சொகுசு விடுதிகளில் தங்கியிருந்ததாக சிலர் தன்னிடம் கூறியதாகவும் தெரிவித்த அவர், தான் அப்படிச் செய்யவில்லை என்றும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது என்றும் குறிப்பிட்டார்.

Contact Us