இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு… புதிய சிவில் சட்டம்… பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு..!!

இனி அபுதாபியில் புதிய சிவில் சட்டத்தின் படி இஸ்லாமியர் அல்லாதவர்கள் விவாகரத்து பெறவும், திருமணம் செய்து கொள்ளவும் அனுமதி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே அபுதாபியில் திருமண சட்டங்கள் இஸ்லாமிய ஷரியா சட்டத்தின் படி நடைமுறையில் இருந்து வந்தது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரக தலைவர் Sheikh Khalifa bin zayed al-Nahayan, சர்வதேச சமுதாயத்தின் வரவேற்பை பெறும் நோக்கில் வளைகுடா பிராந்தியத்தின் முக்கிய பொருளாதார மையமாக விளங்கும் அமீரகத்தில் திருமணம், குழந்தைகளை வளர்க்கும் உரிமை, ஜீவனாம்சம், விவாகரத்து ஆகிய சட்டங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் ஆங்கிலம் மற்றும் அரபு மொழியில் செயல்படும் சிறப்பு நீதிமன்றங்களும் இஸ்லாமியர் அல்லாதவர்களின் விவகாரங்களுக்காக அபுதாபியில் தொடங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Contact Us