இளைஞர் செய்ததை சொல்லத்தெரியாமல் செய்து காட்டிய சிறுமி -உயிர்பிழைத்ததை நினைத்து பெற்றோர் கண்ணீர்

ஆறு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 26 வயது இளைஞரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர் போலீஸார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிஜ்னோர் மாவட்டத்தில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்திருக்கிறது.

பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள மண்டாவாலி பகுதியில் இருக்கும் மிர்சாபூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஷாபாஸ். இந்த இளைஞர் பள்ளிக்குச் சென்ற 6 வயது சிறுமியை பாழடைந்த கட்டிடத்திற்குள் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இந்த வன்கொடுமையில் உயிர் பிழைத்த அந்த சிறுமி வீடு திரும்பிய பின்னர் பெற்றோரிடம் சென்று அழுதிருக்கிறார். தனக்கு நேர்ந்தது என்னவென்று சொல்லத் தெரியாமல் செய்து காட்டி அழுதிருக்கிறார். அதைக்கேட்ட பெற்றோர், தன் மகள் உயிர் பிழைத்து வந்ததே பெரிய விசயம் என்று நினைத்து கண்ணீர் விட்டிருக்கிறார்கள்.

இதையடுத்து அந்த ஆறு வயது சிறுமி சொன்ன தகவலின்படி இளைஞர் ஷாபாஸ்ப் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த ஆறு வயது சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

Contact Us