மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகிறாரா நமீதா மாரிமுத்து?… அவரே சொன்ன பதில்…!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது இந்த நிகழ்ச்சியின் 5-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தவர் நமீதா மாரிமுத்து. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இறுதிப்போட்டி வரை செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் 6-வது நாளே ஒரு சில காரணங்களால் நமீதா மாரிமுத்து பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

இந்நிலையில் நமீதா மாரிமுத்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் தனது ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். அப்போது ரசிகர் ஒருவர், ‘பிக்பாஸ் 5 நிகழ்ச்சியில் மறுபடியும் வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையப் போகிறீர்களா?’ எனக் கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த நமீதா, ‘இதை நீங்கள் பிக்பாஸிடம் தான் கேட்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

Contact Us