லண்டன் தமிழர்களே உஷார்: £3.50 க்கு காரை சார்ச் செய்தால் 300 மைல் ஓடுகிறது: மாற வேண்டாமா ?

பிரித்தானியாவில் பெற்றோல் விலை மேலும் அதிகரிக்க உள்ளது. அதற்கு காரணம் மேலும் வரி போடப்பட உள்ளது. எனவே மிக விரைவில் 1 லீட்டர் பெற்றோல் விலை. 1.50 தொடக்கம் 1.70 வரை செல்ல வாய்ப்புகள் உள்ளது. இன் நிலையில் பல தமிழர்கள், தமது பெற்றோல் காரை கொடுத்து விட்டு, மின்சார கார்களை வாங்க ஆரம்பித்துள்ளார்கள். இதில் நல்ல விடையம் என்னவென்றால், பாவித்த கார்களின் விலை உயர்ந்துள்ளது. காரணம் மக்களிடம் புது கார்களை வாங்க பணம் இல்லை. இதனால் பாவித்த கார்களின் விலை 25% சத விகிதத்தால் ஏற்றம் கண்டுள்ளது. இன் நிலையில் உங்கள் கார்களை நல்ல விலைக்கு விற்று விட்டு. அரசு கொடுக்கும் 5,000 பவுண்டு உதவித் தொகையை போட்டு மின்சார கார்களை வாங்குவது நல்லது.

டெஸ்லா போன்ற கார்களை வாங்கத் தேவை இல்லை. சாதாரண மின்சார கார்கள், தற்போது 250 தொடக்கம் 300 மைல்கள் செய்கிறது. முழுமையாக சார்ஜ் செய்தால் 300 மைல் வரை ஓட வல்ல பல கார்கள் மார்கெட்டில் வந்து விட்டது. ஒரு மின்சார காரை முழுமையாக சார்ஜ் செய்ய, 3.50 பவுண்டுகள் தொடக்கம் 4.50 பவுண்டுகளே செலவாகிறது. எனவே. பெற்றோல் காருடன் ஒப்பிடும் போது பல மடங்கு நீங்கள் மிச்சம் பிடிப்பீர்கள். அது போக சிட்டிக்கு வேறு பல இடங்களுக்குச் சென்றால் கஞெஸ்டன் சார்ஜ் இல்லை.

Contact Us