மாவீரர் நாளில் தமிழ் பெண் சிங்களவனை காதலிக்கும் படம் போடுகிறார்கள்: எங்கே இருந்து இந்த துணிவு வந்தது ?

நவம்பர் மாதம் 27ம் நாள்…. தமிழர்களுக்கு ஒரு புனிதமான நாள், அந்த வாரத்தையே தமிழ் மக்கள் புனித வாரமாக போற்றி வரும் நிலையில். தமிழ் பெண் ஒருவர்,  சிங்கள இளைஞரை காதலிக்கும் “சிவாவின் மகள்” என்ற படத்தை போடவுள்ளார்கள் சில புல்லுருவிகள். இந்தப் படத்தில் போராட்டம் ஒன்றில் குறித்த சிங்கள காதலன் தாக்கப்படுவது போலவும். அவனைக் காப்பாற்றச் சென்ற தமிழ் பெண் இறப்பது போலவும் படமாக்கப்பட்டுள்ளது. இதில் குஜராத்தி இனத்தவர்கள் காசு போட்டார்கள், வெள்ளைக் காரர்கள் நடித்துள்ளார்கள் என்று இயக்குனர் தெரிவித்துள்ளார். குஜராத் இனத்தவர்கள் இந்தப் படத்திற்கு ஏன் காசு போட வேண்டும் ? அப்படியே போட்டாலும் இந்த படம் தமிழனுக்கு எதிரான படம் என்றால் தான் அவர்கள் காசைப் போடுவார்கள் என்பது, ஊர் அறிந்த விடையம். இன் நிலையில் படத்தை வேறு திகதியில் போடுமாறு பலர் வேண்டு கோள் விடுத்தும், ஏற்பாட்டாளர் மறுத்துவிட்டார். சாட் சாத் மாவீரர் நாளில் தான் இந்த படத்தைப் போடுவேன் என்று அடம் பிடிக்கிறார் பாருங்கோ.

ஏற்கனவே விஜய் TV, இளைய ராஜா , ரஜனி காந்த என்று பலர் மாவீர் நாளில் பல நிகழ்வுகளை செய்யப் போய் அவை அனைத்தையும் உலகத் தமிழர்கள் தடுத்து நிறுத்தி விட்டார்கள்.  இது வரலாறு…. தற்போது மீண்டும் மாவீரர் நாளில் படம் ஒன்றை போட்டுக் காட்ட இவர்கள் கிளம்பி உள்ளார்கள். தம்பிமார்களே … கீழே ஏற்பாட்டாளர் இலக்கம் உள்ளதும்.  கடமையை செய்யுங்கள்.

Contact Us