சக அதிகாரியின் மனைவியிடம் வம்பு செய்த ராணுவ அதிகாரி பணியிடை நீக்கம்…. பிரபல நாட்டில் தொடரும் அவலம்….

 

மைக் ரன்ஸ்லே எனும் மேஜர் ஜார்ஜென்ட் பட்டம் பெற்ற பிரித்தானிய ராணுவ அதிகாரி ஒருவர் இராணுவ விருந்தின் போது உடன் வேலை செய்யும் சக ராணுவ அதிகாரிகளின் மனைவியின் மீது கை வைக்க முயன்றதாக புகார்கள் எழுந்துள்ளன. விருந்தின் போது மதுபானம் அதிக அளவில் வழங்கப்பட்டதால் மைக் குடிபோதையில் இவ்வாறு செய்தாரா என குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.

ஏற்கனவே பிரித்தானியாவில் பெண் ராணுவத்தினருக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக புகார்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு புகார் அளித்த பெண் ராணுவ வீராங்கனை ஒருவர் தற்கொலையும் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவம் குறித்து ராணுவத்தின் மூத்த அதிகாரிகளுக்கு தனது கண்டனத்தை தெரிவிப்பதாக பாதுகாப்புத்துறை செயலாளர் பென் வாலஸ் கூறியுள்ளார்.

 

Contact Us