பிரபல கோடீஸ்வர டிரக் மோதி பலியான சம்பவம்….டர்க்கின் டிரைவர் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டியதே காரணம்….!!

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதி கனடாவை சேர்ந்த கோடீஸ்வரரான ரான் காரே லண்டனில் இருந்து பிரிட்டன் நோக்கி சென்ற பழங்கால கார்களின் அணிவகுப்பில் பங்கேற்றுள்ளார். அப்போது தவறுதலாக அவர் நெடுஞ்சாலை ஒன்றிற்கு சென்றுள்ளார். அவ்வாறு அவர் நெடுஞ்சாலையில் செல்லும் போது பின்னால் வந்த ட்ரக் ஒன்று அவர் காரின் மீது மோதியதில் ரான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் மற்றும் அவரது மனைவி படுகாயம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் டர்க்கை ஓட்டி வந்த டிரைவர் மைக்கேல் பிளாக் செல்போனில் பேசிக் கொண்டு வந்ததால் சாலையில் வந்த ரானின் காரை கவனிக்காமல் மோதியது தெரியவந்துள்ளது. இந்த வழக்கு குறித்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

Contact Us