தோழி கொடுத்த குளிர்பானம் – மயங்கியதும் அவரின் 4 ஆண் நண்பர்கள் கூட்டு சேர்ந்து..

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த இருபத்தி மூணு வயது இளம்பெண் ஒருவர் தன் தோழியை சந்திப்பதற்காக ராஜஸ்தான் சென்றிருக்கிறார்.   அங்கே தோழியின் வீட்டில் அவரது ஆண் நண்பர் ஒருவர் குளிர்பானம் கொடுத்திருக்கிறார்.

தோழி வீடு  என்ற நம்பிக்கையில் இளம்பெண்ணும் குளிர்பானத்தை குடித்திருக்கிறார்.   அதில் மதுவை கலந்து கொடுத்திருக்கிறார் அந்த ஆண் நண்பர்.   குளிர்பானத்தை குடித்த கொஞ்ச நேரத்தில் அந்தப் பெண் மயங்கி சுயநினைவு இல்லாமல் போய் இருக்கிறார்.

இதையடுத்து அந்த ஆண் நண்பர் முன்கூட்டியே திட்டமிட்ட படி,   அந்த பெண்ணை டவுரா என்ற பகுதிக்கு தூக்கிச் சென்று இருக்கிறார்.   பங்கு அவருடன் மேலும் மூன்று நண்பர்களுடன் சேர்ந்து அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.   மயக்கம் தெளிந்து அந்த பெண்ணை மீண்டும் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து இருக்கிறார்கள்.   அதன் பின்னர் அப்பெண்ணை அங்கேயே  விட்டுவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

 கண்ணீருடன் போலீசில் அப்பெண் புகார் அளிக்க,   போலீசார் அப்பெண்ணின் தோழியை பிடித்து விசாரணை நடத்த முயன்று வருகின்றனர்.   போலீசார் அறிவுறுத்தல் அந்த இளம்பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.   இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து உள்ளனர் போலீசார்.

பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்திருப்பதால்  விசாரணை நடத்தி வருகிறோம்.   அந்த பெண்ணுக்கு அவர் குடித்த குளிர்பானத்தில் மதுவை கலந்து கொடுத்துள்ளார் அந்த பெண்ணின் தோழியிடம்   விசாரணை நடத்த  ஒரு தனிப்படை  ஜெய்ப்பூர் விரைந்திருக்கிறது .  விரைவில் இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்து விடுவோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

Contact Us