“என்னது! நாலு பேரா.. “மது வாங்கிக்கொடுத்து நண்பர்களால் பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை

ஹரியானா மாநிலம் குருகிராம் பகுதியைச் சேர்ந்த 23 வயது பெண், ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் தன்னுடைய கல்லூரி தோழியை பார்க்க வந்தார் .அப்போது அந்த தோழியின் ஆண் நண்பர் ஒருவர் அந்த இடத்தில் இருந்தார் .பின்னர் அந்த ஆண் நண்பர் அந்த பெண்ணை அவரின் வீட்டில் கொண்டு போய் விடுவதாக கூறி ஒரு இடத்திற்கு கூட்டி சென்றார் .

பின்னர் அங்கு அந்த நபர் அந்த பெண்ணுக்கு மது ஊற்றி குடிக்க கொடுத்தார் .அந்த பெண் அந்த மதுவை குடித்ததும் மயங்கி விழுந்தார் .அதன் பிறகு அந்த நபர் அந்த பெண்ணை கெடுத்ததும் ,அவரின் மேலும் மூன்று நணபர்களுக்கு போன் செய்து அந்த இடத்திற்கு வர சொன்னார் . பிறகு அங்கு வந்த அந்த வெளியூர் நபர்களும் சேர்ந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனர் .பின்னர் அந்த மது மயக்கம் தெளிந்து எழுந்த அந்த பெண்,’ தன்னை இப்படி நாலு பேர் மது மயக்கத்தில் பலாத்காரம் செய்து விட்டதை நினைத்து அவர்களிடம் தகறாரு செய்தார்.

ஆனால் அவர்கள் அந்த பெண்ணை அங்கேயே விட்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர் ,பிறகு அந்த பெண் மெல்ல தடுமாறி வந்து தனக்கு மது மயக்கத்தில் நடந்த கொடுமையை பற்றி அங்குள்ள பொலிசில் புகார் கொடுத்தார் போலீசார் வழக்கு பதிந்து தப்பியோடிய அந்த குற்றவாளிகளை தேடி வருகின்றனர் .அடுத்து கோட்வாலி காவல்நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் குற்றம் நடந்த இடத்திற்கு வந்து அந்தப் பெண்ணை மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று ,அந்த பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர் .

Contact Us