‘அநியாயமாக கொல்லப்பட்ட சிறுவன்’…. தந்தையால் ஏற்பட்ட விபரீதம்…. நரக வேதனையுடன் தாய்….!!

பிரித்தானியாவில் உள்ள போர்ச்சுகலைச் சேர்ந்த Phoebe Arnold என்ற பெண் தனது கணவரை பிரிந்து 3 வயது மகனான Tassoவுடன் வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவரின் முன்னாள் கணவர் Clemens Weisshaar Tassoவை தன்னுடன் அனுப்புமாறும் மீண்டும் திரும்பி வந்து நவம்பர் 1 ஆம் தேதி ஒப்படைத்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார். இதனால் அந்த பெண் தனது மகனை அவருடன் அனுப்பி வைத்துள்ளார்.

ஆனால் Clemens Weisshaar கூறியபடி Tassoவை திரும்பி அழைத்து வரவில்லை. இதனை தொடர்ந்து Phoebe போலீசாரிடம் நடந்ததை கூறி தனது மகனையும் முன்னாள் கணவரையும் காணவில்லை என்று புகார் அளித்துள்ளார். மேலும் அவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் இருவரையும் தேடி வந்துள்ளனர்.

இந்த நிலையில் ஒரு மலையின் அருகே Tasso காருக்குள் எரிந்த நிலையிலும் Clemens Weisshaar துப்பாக்கியால் சுடப்பட்டு காயங்களுடன் இறந்த நிலையிலும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். குறிப்பாக மகனைப் பிரிய மனமில்லாமல் Clemens Weisshaar அவனைக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்து வந்தனர்.

இந்த நிலையில் மகனை அழைத்துச் சென்ற Clemens Weisshaar முன்னாள் மனைவியான Phoebeக்கு விடுத்துள்ள மிரட்டல் குறித்து தற்பொழுது தகவல் வெளிவந்துள்ளது. அவர் Phoebeவிடம் ‘நீ என்னுடன் சேர்ந்து வாழ வேண்டும். இல்லையெனில் நமது மகனை கொலை செய்துவிடுவேன். இதற்கு பிறகு உனது வாழ்க்கை நரகமாகிவிடும்’ என்று செய்தி அனுப்பியுள்ளார்.

அதிலும் அவர்கள் வீட்டில் பணிபுரிந்த வேலைக்கார பெண் Clemens Weisshaar அவரது மனைவியான Phoebeவை தாக்குவதை பல முறை நேரில் கண்டுள்ளார். தற்பொழுது தான் Phoebe அவரின் முன்னாள் கணவரான Clemens Weisshaar அனுப்பிய செய்திகளை போலீசாரிடம் காட்டியுள்ளார். ஆனால் இது மிகவும் காலம்கடந்த செயல். குறிப்பாக உண்மையிலேயே அவரின் வாழ்க்கை தற்பொழுது நரகமாகிவிட்டது.

Contact Us