கோட்டபாய தலையில் மிழகாய் அரைத்த நபர் யார் ? சீன உரத்தில் சிக்கி சின்னா பின்னமானது எப்படி ?

இலங்கை குட்டிச்சுவராகி மாறிக்கொண்டு வரும் நிலையில், மேலும் பாரிய பின்னடைவை அது சந்தித்துள்ளது. கோட்டபாயவுக்கு மிக நெருக்கமான ஒரு நபர் கொடுத்த ஐடியாவில் தான் இலங்கைக்கு சீன உரத்தை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கி இருந்தார் கோட்டா. ஆனால் அந்த உரத்தை, அனைத்து விவசாயிகளும் மற்றும் விவசாய கூட்டு நிறுவங்களும் புறக்கணித்துள்ளது. காரணம் முதலில் கிடைக்கப் பெற்ற முடிவுகளின் அடிப்படையில், இந்த சீன உரத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் பற்றீரியாக்கள் உள்ளது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இதனை பாவித்தால் எஞ்சியுள்ள கொஞ்ச பயிர்களும் அழியலாம் என்று கூறப்படுகிறது. இன் நிலையில்…

அபாயகர பக்டீரியா அடங்கியதாகக் கூறப்பட்ட சீன சேதன பசளையில் அத்தகைய தீங்கு விளைவிக்கும் பக்டீரியா இல்லையென மூன்றாம் தரப்பு உறுதிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. ஸ்கட்டர் குளோபல் இன்ஸ்பெக்ஷன் எண்ட் சர்வே, நிறுவனத்தினால் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.தேசிய தாவரவியல் தடுப்புக் காப்பு சேவையினால் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த சேதன பசளையில் அபாயகரமான பக்டீரியாக்கள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் தற்போது இந்த அறிக்கையை மாற்றி எழுதியுள்ளார்கள், எது எப்படி என்றாலும் பெரும் தொகை பணத்தை பெற்றுக் கொண்டு ஒருவர் டீலை முடித்து கோட்டபாய கையில் உரமாக கொடுத்து விட்டு எஸ்கேப் ஆகி விட்டார்.

என்ன செய்வது என்று தெரியாமல் கோட்டபாய, ராணுவத்தை வைத்து விவசாயிகளின் கழுத்தை நெருக்க என்னால் முடியும் என்று ஒரு ராணுவ தளபதி போல பேசி வருவது வேடிக்கையான விடையம்.

Contact Us