நண்பனின் மனைவி என்றும் பாராமல்… ‘கூடா நட்பு கேடாய் முடியும்’…!

மகாராஷ்டிராவில் நண்பனின் மனைவியை கூட்டு பலாத்காரம் செய்த இருவர் கைது
மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தின் வசாய் என்ற பகுதியில் தனது 27 வயதான மனைவியுடன் சிகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வசித்து வருகிறார். சிகாவுக்கு அதே ஊரில் 21 வயதில் இரண்டு நண்பர்கள் உள்ளனர். இவர்கள் அடிக்கடி சிகாவை பார்க்க அவரது வீட்டுக்கு வந்து செல்வது வழக்கம். சிகாவின் மனைவியும் கணவரின் நண்பர்கள் என்பதால் அவர்கள் வீட்டுக்கு வந்து செல்வதை கண்டுக்காமல் இருந்து வந்துள்ளார்.

நண்பனின் மனைவியை சகோதரி என்று நினைக்காமல் இருவருக்கும் சிகாவின் மனைவி மீது ஆசை ஏற்பட்டுள்ளது. நீண்ட நாளாக இருந்த அந்த ஆசைக்கு முடிவு கட்ட நினைத்தவர்கள் கடந்த புதன்கிழமை அன்று சிகா வீட்டில் இல்லாததை தெரிந்துகொன்டு அங்கு சென்றுள்ளனர்.

அப்போது சிகாவின் மனைவி, கணவர் வெளியில் சென்றுள்ளார் நான் மட்டும்தான் உள்ளேன் என்று கூறியுள்ளார். ஆனால், அதை முன்னரே தெரிந்துகொண்டுதான் இருவரும் வந்துள்ளனர் என்பதை அறியாத அப்பாவி பெண் விஷயத்தை கூறிவிட்டு உள்ளே சென்றுள்ளார். அப்போது வீட்டுக்கு வந்து கதவை சாத்திக்கொண்டவர்கள் நண்பனின் மனைவியை அடித்து உதைத்து பின்னர் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

எவ்வளவோ முயற்சித்தும் சிகாவின் மனைவியால் அவர்களிடம் இருந்து தப்ப முடியவில்லை. பின்னர் நண்பர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடினர். இதனையடுத்து, சிகாவின் மனைவி தனக்கு நேர்ந்ததை கணவனிடம் சொல்லி கதறியுள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து பால்கர் காவல் நிலையத்துக்கு சென்று புகார் கொடுத்தனர்.

அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அன்று இரவே தலைமறைவாக இருந்த வாலிபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிமன்றம் இருவரையும் நவம்பர் 13 வரை போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.

Contact Us