16 வயது சிறுவனால் ஏற்பட்ட விபரீதம் – மற்றுமொரு உயிர் பிரிந்தது

அண்மையில் வெலிசறை மஹாபாகே மயானத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் இரத்தினபுரியில் வசிக்கும் 17 வயதுடைய க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு கற்கும் மாணவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கடந்த 4ஆம் திகதி வெலிசறை பிரதேசத்தில் 16 வயதுடைய மாணவன் ஓட்டிச் சென்ற சொகுசு கார் பல வாகனங்களுடன் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவன் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த மாணவனின் 52 வயதுடைய உறவினர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட 16 வயதுடைய பாடசாலை மாணவர் மற்றும் அவரது தந்தை ஆகியோர் எதிர்வரும் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Contact Us