மூன்று மாதங்களில் இவ்வளவு பேரா….? தலீபான்களின் அதிரடி நடவடிக்கை…. வெளிவந்துள்ள முக்கிய தகவல்….!!

ஆப்கானிஸ்தானை கடந்த ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதனால் அங்கு பொருளாதார நெருக்கடி, பசி, பஞ்சம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தலீபான்கள் ஆப்கானிஸ்தானில் இடைக்கால அரசை நிறுவியுள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 600 ஐ.எஸ் பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனால் நாட்டின் பாதுகாப்பானது மேம்படுத்தப்பட்டுள்ளது என தலீபான்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக இவர்கள் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி காபூல் சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி தலீபான்களுக்கு எதிராக சவால் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து மசூதிகள், மருத்துவமனைகள் போன்ற இடங்களில் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Contact Us