மூளைச்சாவு அடைந்த இந்திய மாணவி: பெற்றோர்கள் எடுத்த நெகிழ்ச்சி முடிவு

அமெரிக்காவில் மூளைச்சாவு அடைந்த இந்திய மாணவியின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது பெற்றோர் முடிவு செய்துள்ளனர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் ‘அஸ்ட்ரோவேர்ல்டு’ என்ற இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அமெரிக்காவின் பிரபல பாப் பாடகரான ட்ராவிஸ் ஸ்காட் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், சுமார் 50,000 பேர் திரண்டிருந்தனர். இசை நிகழ்ச்சியின் போது பாடகர் ட்ராவிஸ் ஸ்காட்டை பார்க்க ரசிகர்கள் திரண்ட போது கூட்டநெரிசல் ஏற்பட்டது.

இதனால் பாடகர் பாடுவதை நிறுத்த, கூட்டம் கட்டுப்பாடின்றி ஓடியதால் நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர், 300 பேர் காயமடைந்தனர். இதில் இந்தியாவை சேர்ந்த மாணவி பாரதி சஹானியும் ஒருவர், கடந்த 5 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்து விட்டார்.

இதனையடுத்து அவரது பெற்றோர் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்துள்ளனர், பாரதி சஹானி தங்களுக்கு கிடைத்த வரம் என்றும், அவள் தான் தங்கள் குடும்பத்து தேவதை எனவும் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பாரதியின் பெற்றோர் உடைந்து அழும் காட்சிகள் கண்கலங்கவைத்துள்ளன.

Contact Us